வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 26 ஆகஸ்ட் 2022 (12:26 IST)

உ.பி. முதல்வர் யோகி ஆதித்தியநாத் மீது வழக்கு: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

supreme
உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் மீது வழக்கு தொடர அனுமதி மறுக்கப்பட்டதற்கு எதிரான மனு மீதான தீர்ப்பு இன்று வெளியாகியுள்ள நிலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசியதாக உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் மீது வழக்கு தொடர உத்தர பிரதேச அரசு அனுமதி மறுத்தது
 
இதனை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனு மீது இன்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா தலைமையிலான அமர்வு தீர்ப்பு வழங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது 
 
தலைமை நீதிபதி என்.வி.ரமணா இன்று ஓய்வு பெறவிருக்கும் நிலையில் இந்த தீர்ப்பு தான் அவரது கடைசி தீர்ப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது 
 
இந்த நிலையில் சற்று முன் வெளியான தீர்ப்பில் வெறுப்புணர்வை தூண்டியதாக உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மீது வழக்கு தொடர அனுமதி மறுக்கப்பட்டது எதிரான மனு தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.