வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: திங்கள், 29 ஜனவரி 2024 (16:57 IST)

சந்திரபாபு நாயுடுவின் முன்ஜாமீன் மனு: ஆந்திர மாநில அரசின் மனு தள்ளுபடி..!

முன்னாள் ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் முன்ஜாமீன் மனுவுக்கு எதிராக ஆந்திர அரசு தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது  

சந்திரபாபு மீது ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு வரும் நிலையில் திறன் மேம்பாட்டு கழகத் திட்டத்தில் 371 கோடி ரூபாய் ஊழல் செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த நிலையில் தற்போது அவர் ஜாமீன் பெற்று வெளியே உள்ளார். இந்த நிலையில் இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் சந்திரபாபு நாயுடு மனு தாக்கல் செய்து இருக்கும் நிலையில் அவரது ஜாமீன் மனுவை ரத்து செய்ய வேண்டும் என ஆந்திர அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஆந்திரா அரசு தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தது. முந்தைய  உத்தரவை கருத்தில் கொண்டு ஆந்திர அரசின் மேல்முறையீட்டு மனுவை ஏற்க சுப்ரீம் கோர்ட் விரும்பவில்லை என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

Edited by Mahendran