வெள்ளி, 29 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வெள்ளி, 19 ஜனவரி 2024 (07:03 IST)

சந்திரபாபு நாயுடுவின் ஜாமீனை எதிர்க்கும் வழக்கு: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை..!

chandrababu naidu
திறன் மேம்பாட்டு ஊழல் வழக்கில் ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு  நாயுடு கைது செய்யப்பட்டு இருந்தார். இந்நிலையில் சந்திரபாபு நாயுடுவுக்கு ஹைகோர்ட் ஜாமீன் வழங்கிய நிலையில் ஆந்திர அரசு  சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. இந்த மனு இன்று விசாரணைக்கு வரவுள்ளது.
 
சந்திரபாபு நாயுடு மீது ஆந்திராவில் திறன் மேம்பாட்டு கழக ஊழல் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இவ்வழக்கில் சமீபத்தில் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்ட நிலையில் அவருக்கு நீதிமன்ற  காவல் உத்தரவு பிறப்பித்தது.
 
இந்த வழக்கில் சந்திரபாபு நாயுடு ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை  ஆந்திர உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில் சந்திரபாபு நாயுடு தரப்பினர் ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்
 
இந்த வழக்கை விசாரிக்க உச்சநீதிமன்றம் அமர்வை நியமனம் செய்த நிலையில் இந்த அமர்வு இன்று விசாரணை நடத்துகிறது. இந்த வழக்கில் சந்திரபாபு நாயுடுவுக்கு ஜாமீன் கிடைக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். இந்த வழக்கு ஆந்திரா அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by siva