திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : திங்கள், 11 டிசம்பர் 2023 (11:50 IST)

தனி ஆட்சி உரிமை கிடையாது.. இந்திய அரசியலமைப்போடு இணைந்ததுதான் காஷ்மீர்.. அதிரடி தீர்ப்பு

காஷ்மீருக்கு என தனி ஆட்சி உரிமை கிடையாது என்றும், இந்திய அரசியலமைப்போடு இணைந்ததுதான் காஷ்மீர் என்றும் சுப்ரீம் கோர்ட் ஜம்மு காஷ்மீரின் தனி அந்தஸ்து ரத்து குறித்த வழக்கில் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
 
இந்தியாவுடன் இணைந்த பிறகு தனது முழுமையான இறையாண்மையை காஷ்மீர் இழந்து விடுகிறது என்றும், இந்திய அரசியலமைப்போடு இணைந்ததுதான் காஷ்மீர் அரசியலமைப்பு என்றும், ஜம்மு காஷ்மீருக்கு என்று தனி இறையாண்மையோ, ஆட்சி உரிமையோ இருக்க முடியாது என்றும்  தலைமை நீதிபதி தெரிவித்துள்ளர்.
 
 சட்டப்பிரிவு 370 என்பது ஒரு தற்காலிக ஏற்பாடு என நாங்கள் கருதுகிறோம் என்றும், 370 சட்டப்பிரிவு மாநிலத்தில் போர் நிலைமைகள் காரணமாக ஒரு இடைக்கால ஏற்பாடாக இருந்தது என்றும், ஜம்மு காஷ்மீர் மாநிலம் பிற மாநிலங்களிலிருந்து வேறுபட்ட இறையாண்மையை கொண்டிருக்கவில்லை என்றும் நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். 
 
ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த ஒரு பகுதி என்றும் குடியரசு தலைவர் ஆட்சி அங்கு இருக்கும்போது மத்திய அரசு எடுக்க முடிவுகளை கேள்விக்கு உள்ளாக்க முடியாது என்றும் நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.
 
Edited by Siva