தொடர்புடைய செய்திகள்
- பாலியல் வல்லுறவு வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட கிரிக்கெட் வீரர்… தீர்ப்பு விரைவில்!
- தீர்ப்பில் நேர்மையில்லை என தோன்றுகிறது: பொன்முடி வழக்கு குறித்து திருமாவளவன்
- பொன்முடியின் சொத்துக்கள் முடக்கமா? சென்னை ஐகோர்ட் நீதிபதி அதிரடி தீர்ப்பு..!
- 3 ஆண்டுகள் சிறை தண்டனை.. நூலிழையில் தப்பித்த பொன்முடி..!
- பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறைதண்டனை.. ஆனால் 30 நாட்களுக்கு நிறுத்திவைப்பு..!
அதானி குறித்து ஹிண்டன்பர்க் கூறிய விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் இன்று தீர்ப்பு!
அதானி நிறுவனங்கள் குறித்து ஹிண்டன்பர்க் என்ற அமைப்பு கூறிய கருத்துக்களுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதானி குழுமம் முறைகேட்டில் ஈடுபட்டதாக அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் நிறுவனம் அறிக்கை வெளியிட்டதை அடுத்து அந்த அறிக்கை காரணமாக அதானி குழுமத்தின் பங்குகள் படுமோசமாக சரிந்தது.
இந்த நிலையில் ஹிண்டன்பர்க் அறிக்கையின் உண்மை தன்மையை ஆராய வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இந்த மனுக்களை சுப்ரீம் கோர்ட் கடந்த சில மாதங்களாக விசாரித்தது.
மேலும் செபியின் விதிமுறைகள், பங்குச்சந்தை கட்டமைப்பை வழிபடுத்துவதற்கான வழிமுறைகள் குறித்தும் ஆய்வு செய்ய ஒரு குழு அமைக்கப்பட்டது. இந்த குழு அறிக்கையை சமர்ப்பித்த நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாக உள்ளது.
இந்த வழக்கின் தீர்ப்பை நாடே மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து காத்து இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
