ஜூலை இறுதிக்குள் ஒரே நாடு ஒரே ரேசன் கார்டு திட்டம்! – உச்சநீதிமன்றம் உத்தரவு!
மத்திய அரசின் ஒரே நாடு ஒடே ரேசன் கடை திட்டத்தை ஜூலை இறுதிக்குள் அமல்படுத்த உச்சநீதிமன்றம் மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
நாடு முழுவதும் புலம்பெயர் தொழிலாளர்களும் அவர்கள் பணிபுரியும் மாநிலங்களிலேயே உணவு பொருட்களை பெறும் வகையில் ஒரே நாடு ஒரே ரேசன் கார்டு திட்டத்தை மத்திய அரசு நடைமுறைக்கு கொண்டு வந்தது. எனினும் சில மாநிலங்களில் இன்னமும் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படாமல் இருந்து வருகிறது.
இந்நிலையில் இதுகுறித்து தற்போது உத்தரவு பிறப்பித்துள்ள உச்சநீதிமன்றம் ஜூலை மாத இறுதிக்குள் அனைத்து மாநிலங்களும் ஒரே நாடு ஒரே ரேசன் கார்டு திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என கூறியுள்ளது. ரேஷன் பொருட்க வழங்குவது குறித்து மாநில அரசுகள் திட்டம் வகுத்துக் கொள்ள வேண்டும் என்றும், புலம்பெயர் தொழிலாளர்களுக்கான தானியங்களை மத்திய அரசு வழங்கி அவர்களுக்கான உணவு வழங்கலை உறுதி படுத்த வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.