வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : வியாழன், 11 ஆகஸ்ட் 2022 (13:47 IST)

இலவசங்கள் கொடுக்காதீர்கள் என்று உத்தரவிட முடியாது: உச்சநீதிமன்றம்

இலவசங்களை கொடுக்கக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட முடியாது என கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 
 
இலவசங்கள் தருவதை நிறுத்த வேண்டும் என உத்தரவிட வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது
 
 இந்த வழக்கு விசாரணையின்போது இந்தியா போன்ற ஒரு நாட்டில் இலவசங்களை கொடுக்காதீர்கள் என உத்தரவிட முடியாது என சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது
 
மக்கள் நலத் திட்டங்களுக்கும் இலவசங்களுக்கு வேறுபாடு உள்ளது என்றும் அரசு வழங்கும் இலவசம் சில நேரத்தில் உயிர் காக்கும் அம்சங்களாக உள்ளன என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர் 
 
இலவசங்களை அறிவிக்கும் கட்சிகளின் பதிவை ரத்து செய்வது ஜனநாயக விரோத செயல் என்றும் இலவசங்களை வரை முறைப்படுத்துவது தொடர்பாக மத்திய அரசு தான் சட்டம் இயற்ற வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்