செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 9 ஜூன் 2022 (08:24 IST)

மாற்றுத்திறனாளிகளுக்கு இட ஒதுக்கீடு: குழு அமைத்து அரசாணை வெளியீடு!

assembly
வேலைவாய்ப்பில் மாற்றுத் திறனாளிகளுக்கான 4 சதவீத இட ஒதுக்கீட்டை உறுதி செய்ய ஒன்பது பேர் கொண்ட குழு அமைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது 
 
மாற்றுத்திறனாளிகளின் பல ஆண்டு கோரிக்கைகளான வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வேண்டும் என்பது குறித்து தமிழக அரசு கடந்த சில மாதங்களாக பரிசீலனை செய்தது என்பதை பார்த்தோம்
 
இந்த நிலையில் மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு வேலைவாய்ப்பில் 4 சதவீத இட ஒதுக்கீடு செய்ய தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக 9 பேர் கொண்ட குழு அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது
 
இந்த குழு மாற்றுத்திறனாளிகள் குழு செயலாளர் தலைவராகவும் தொழிலாளர் நலத்துறை மனித மேம்பாட்டு மேலாண்மை துறை செயலாளர் உறுப்பினர்களாகவும் செயல்படுவார்கள் 
 
இந்த குழுவின் பரிந்துரைக்கு ஏற்ப மாற்றுத்திறனாளிகளுக்கான இட ஒதுக்கீடு முடிவு எடுக்கப்படும் என தெரிகிறது