திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 8 அக்டோபர் 2021 (13:54 IST)

அரெஸ்ட் பண்ணாம ஏன் கெஞ்சிகிட்டு இருக்கீங்க? – உ.பி அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி!

லக்கிம்பூர் விவசாயிகள் கொலை வழக்கில் ஆஷிஷ் மிஸ்ராவை கைது செய்யாதது ஏன் என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

உத்தரபிரதேசம் மாநிலம் லக்கிம்பூரில் பாஜகவினர் கார் விவசாயிகள் மீது மோதிய சம்பவத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இருவரை உத்தரபிரதேச காவல்துறை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் இந்த வழக்கு குறித்து இன்று விசாரணை மேற்கொண்ட உச்சநீதிமன்றம் ”கொலை குற்றம் சாட்டப்பட்டுள்ள ஆஷிஷ் மிஸ்ராவை இன்னமும் கைது செய்யாமல் தயவு செய்து வாருங்கள், தயவு செய்து பதில் கூறுங்கள் என்று காவல்துறை கெஞ்சி கொண்டிருப்பது ஏன்?” என கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் லக்கிம்பூர் கொலை சம்பவம் குறித்து மாநில அரசும், போலீஸும் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.