1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 5 மே 2022 (10:34 IST)

ஜெய்பீம் விவகாரம்; சூர்யா, ஜோதிகா மீது வழக்குப்பதிவு! – 20ம் தேதி விசாரணை!

ஜெய்பீம் படத்தில் வன்னியர் சமுதாயத்தை தவறாக சித்தரித்ததாக தொடரப்பட்ட வழக்கின் விசாரணை 20ம் தேதி நடைபெற உள்ளது.

சூர்யா நடிப்பில் த.செ.ஞானவேல் இயக்கி வெளியான படம் ஜெய் பீம். ஓடிடியில் வெளியான இந்த படம் பரவலான பாரட்டுகளை பெற்ற நிலையில் பல்வேறு திரைப்பட விழாக்களிலும் விருதுகளை பெற்று வருகிறது.

இந்நிலையில் ஜெய்பீம் திரைப்படத்தில் வன்னியர் சமுதாயத்தை தவறாக சித்தரித்து காட்டியிருந்ததாக ருத்ர வன்னிய நிறுவன தலைவர் சந்தோஷ் குற்றம் சாட்டியுள்ளார். அதன்பேரில் ஜெய்பீம் பட இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்களான சூர்யா, ஜோதிகா மீது வழக்குப்பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கின் மீதான விசாரணையை மே 20ம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.