திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : வெள்ளி, 23 ஏப்ரல் 2021 (12:27 IST)

ஸ்டெர்லைட் ஆலையில் தமிழக அரசே ஆக்சிஜன் தயாரிக்கலாமே! உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கேள்வி

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை தமிழக அரசின் உத்தரவால் மூடப்பட்டு இருக்கும் நிலையில் இந்த ஆலையை மீண்டும் திறக்க தமிழக அரசு அனுமதிக்க முடியாது என சுப்ரீம் கோர்ட்டில் தனது வாதத்தை முன் வைத்துள்ளது 
 
ஆக்சிஜன் தயாரிப்புக்காக தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்ககலாம் என மத்திய அரசு நேற்று உச்ச நீதிமன்றத்தில் கூறிய நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது 
 
இந்த நிலையில் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க கூடாது என தமிழக அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அப்போது தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஏன் தமிழக அரசே ஆக்சிஜன் தயாரிக்க கூடாது என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார். இந்த கேள்விக்கு தமிழக அரசு என்ன பதில் சொல்லப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்