வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வியாழன், 5 டிசம்பர் 2024 (12:03 IST)

பாலியல் வழக்குகளில் சிக்கியவர்களுக்கு ஜாமீன் கூடாது!' - நீதிமன்றங்களுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

பாலியல் வன்கொடுமை, கொலை, கொள்ளை போன்ற கடுமையான வழக்குகளில் சிக்கியவர்களுக்கு வழக்கு விசாரணை தொடங்கியவுடன் ஜாமீன் வழங்கக் கூடாது என உச்சநீதிமன்றம் உயர்நீதிமன்றங்களுக்கு அறிவுறுத்தி உள்ளது.

பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஒருவருக்கு உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கிய நிலையில், இந்த ஜாமினை ரத்து செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், உயர்நீதிமன்றங்கள் மற்றும் பிற நீதிமன்றங்கள், பாலியல் வன்கொடுமை, கொலை, மோசடி போன்ற குற்றச்சாட்டுகளில் ஈடுபட்டவர்களுக்கு வழக்கு விசாரணை தொடங்கிய பின் ஜாமீன் வழங்கக் கூடாது என்று அறிவுறுத்தினர். ஒருவேளை விசாரணை தாமதமானால், குற்றம் சாட்டப்பட்டவர் மீது தவறில்லை என தெரிந்தால் மட்டுமே குற்றம் சாட்டப்பட்டவருக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில் ஜாமீன் வழங்கலாம் என்றும் தெரிவித்தனர்.

வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வரும்போது ஜாமீன் வழங்குவது சமீப காலங்களில் அதிகமாக நடந்து வருவது சரியானது அல்ல என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். ஒரு வழக்கு வந்துவிட்டால், அந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர் குற்றவாளியாக இருந்தாலும், நிரபராதியாக இருந்தாலும் அந்த வழக்கு முடியும் வரை ஜாமீன் வழங்கக்கூடாது என்றும், இடையில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஆதரவாக முடிவெடுக்கப்பட்டால் அது வழக்கின் விசாரணையை பாதிக்கும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.


Edited by Siva