செவ்வாய், 21 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : செவ்வாய், 23 ஜனவரி 2024 (08:34 IST)

பொதுமக்களின் தரிசனத்துக்காக இன்று திறக்கப்படும் ராமர் கோவில்: தரிசனம் நேரம் என்ன?

odisha ramar temple
அயோத்தி ராமர் கோவில் பொதுமக்களின் தரிசனத்துக்காக இன்று திறக்கப்படுகிறது. நேற்று கும்பாபிஷேகம் நடந்து முடிந்த நிலையில் இன்று முதல் மக்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகிறது. மேலும் தினமும் காலையில் 7 முதல் 11.30 மணி வரையும், மதியம் 2 மணி முதல் இரவு 7  மணி வரையும் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகிறது. 
 
தினமும் 3 வகையான ஆரத்தி நிகழ்வு நடைபெறும் என்றும் தரிசனத்தில் பங்கேற்க பாஸ் முன்பதிவு செய்ய வேண்டும். தரிசனத்துக்கு வரும் பக்தர்கள் அடையாள ஆவணங்களை கொண்டு வர வேண்டும்.

 
நேற்று  கோலாகலமாக கும்பாபிஷேகம் நடந்து முடிந்த நிலையில், இன்று முதல் மக்கள் தரிசனத்துக்கு அனுமதி வழங்கப்படுவதால்  ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள் என்ரு எதிர்பார்க்கப்படுகிறது.
 
இந்தியாவின் மிகப்பெரிய இந்து கோயில்களில் ஒன்றான அயோத்தி ராமர் கோயில், 2020 ஆம் ஆண்டு திசம்பர் மாதம் அடிக்கல் நாட்டப்பட்டு, 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
Edited by Siva