1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : சனி, 27 ஜூலை 2019 (20:40 IST)

கேரள `டிக் டாக்' புகழ் சிறுமி திடீர் மரணம் .. ரசிகர்கள் அதிர்ச்சி

சமீபத்திய வரவான டிக்டாக் செயலியை தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. அந்த அளவுக்கு மக்கள் அதில் மூழ்கிவிட்டனர். இந்த டிக்டாக் வீடியோவால் பலர் தங்கள் திறமைகளை காட்டியுள்ளனர். இதனை தவறான நோக்கங்களுக்காக பயன்படுத்தியவர்களும் உண்டு.
இந்நிலையில் டிக்டாக் செயலியில் வீடியோ வெளியிட்டு பிரபலமானவர் சிறுமி ஆருணி (9). இவர் மலையாள பாடல்களுக்கு முகபாவனை செய்து வீடியோ வெளியிட்டதற்கு இவருக்கு ரசிகர்கள் பலர் உள்ளனர்.
 
இந்நிலையில்  சில மாதங்களாகவே ஆருணி மிகக்கடுமையான தலைவலியால் பாதிக்கப்பட்டார். இதற்கு சிகிச்சை பெறுவதற்காக அவரது பெற்றோர் அவரை திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டனர். இதில் ஆருணிக்கு என்ன நோய் என்பது தெரியாமலேயே, சிகிச்சை பெருகையிலேயே உயிரிழந்தார். ஆருணியில் மரணம் அனைவருக்கும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.