காவல் நிலையத்தில் டான்ஸ் ஆடிய பெண் அதிகாரி – டிக் டாக் வீடியோவால் சஸ்பெண்ட்
குஜராத் மாவட்டத்தில் பெண் காவலர் ஒருவர் இந்தி பாடலுக்கு டான்ஸ் ஆடி டிக்டாக் வீடியோ வெளியிட்டதால் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
குஜராத் மாநிலத்தில் மஹெசேனா மாவட்டத்தில் உள்ள காவல் நிலையத்தில் பணியாற்றுபவர் அர்பிதா சவுத்ரி. இவருக்கு டிக் டாக் செய்வதில் ஆர்வம் அதிகம் போலும். காவல் நிலையத்தில் யாரும் இல்லாத போது இந்தி பாடல் ஒன்றுக்கு முகபாவனை செய்து அதை டிக் டாக் செயலியில் பகிர்ந்துள்ளார்.
பொதுமக்களிடையே பரவிய இந்த வீடியோ பெரும் சர்ச்சைக்கு உள்ளானது. காவல் நிலையத்தில் சீருடை அணியாமல் வேறு உடை அணிந்திருந்தது, பணியை செய்யாமல் டிக் டாக் வீடியோ செய்து கொண்டிருந்தது ஆகிய குற்றங்களுக்காக அவரை சஸ்பெண்ட் செய்துள்ளனர்.