புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: சனி, 27 ஜூலை 2019 (18:25 IST)

என்கவுண்ட்டர் செய்ய போய் டிக்டாக் செய்த போலீஸ் – வைரலான வீடியோ

உத்தர பிரதேசத்தில் எண்கவுண்ட்டர் செய்ய சென்ற போலீஸ் அணியினர் டிக்டாக் வீடியோ செய்து வெளியிட்ட சம்பவம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

உத்தர பிரதேசத்தில் உள்ள பஸ்தி மாவட்டத்தின் இன்ஸ்பெக்டர் விக்ரம் சிங். இவரது தலைமையில் என்கவுண்ட்டருக்கு சென்ற குழு ஒன்று திரும்ப வரும்போது வீடியோ எடுத்து டிக்டாக் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

அந்த வீடியோவில் விக்ரம் சிங் மற்றும் அவரது சகாக்கள் கையில் துப்பாக்கியோடு என்கவுண்ட்டருக்கு திட்டம் வகுத்து செல்வது போல் காட்சி உள்ளது. பஞ்சாப் பாடல் ஒன்று பின்னால் ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்த வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்த சிலர் காவல் அதிகாரிகளே இப்படி செய்யலாமா என்ற ரீதியில் பதிவிட்டுள்ளனர். ஏற்கனவே உத்தர பிரதேசத்தில் பா.ஜ.க எம்.எல்.ஏ ஒருவர் துப்பாக்கிகளோடு இருக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.