புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 12 ஆகஸ்ட் 2019 (08:56 IST)

காங்கிரஸ் எனும் குடும்பத்தில் இருந்து வந்தவர் சோனியா காந்தி – கே எஸ் அழகிரி விளக்கம் !

காங்கிரஸின் இடைக்காலத் தலைவராக மீண்டும் சோனியா காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி விளக்கமளித்துள்ளார்.

பொதுத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்ததை அடுத்து காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். அதன் பின் காங்கிரஸின் அடுத்தத் தலைவர் யார் என்று தேர்வு செய்வதில் குழப்பம் நீடித்தது. இதனால் காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவராக சோனியா காந்தி நியமனம் நேற்று நியமனம் செய்யப்பட்டுள்ளார். நேற்று டெல்லியில் நடந்த காங்கிரஸ் செயற்குழு கூட்டத்திற்கு பின் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆஷாத் இந்த தகவலை பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.

இதையடுத்து மீண்டும் நேரு குடும்பத்தில் இருந்தே தலைவர் வந்திருப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதுகுறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரியிடம் கேள்வி எழுப்பியபோது ‘தற்போது அரசியல் வேறுபாடுகளைத் தாண்டி கொள்கை ரீதியான வேறுபாடுகள் அதிகளவில் ஏற்பட்டுள்ளன. அந்த வேறுபாடுகளோடு சமர்புரியும் ஒரு தலைவராக சோனியா இருப்பார். சோனியா காந்தி நிதானமும் தெளிவும் மிக்கவர்.  ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர் மீண்டும் தலைவராகவில்லை. காங்கிரஸ் என்னும் ஒரே குடும்பத்திலிருந்து அவர் தலைவராகியுள்ளார். சோனியா கேள்விகளுக்கு அப்பாற்பட்டவர்’ எனத் தெரிவித்துள்ளார்.