செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : சனி, 14 ஏப்ரல் 2018 (18:38 IST)

ரேஷன் கார்ட்டுடன் ஆதார் எண் இணைப்பு: மத்திய அரசு புதிய அறிவிப்பு!!

மத்திய அரசால் ஆதார் எண் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் அனைத்து ஆவணங்களுன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது.


 

 
 
அரசின் முக்கிய அடையாள அட்டைகளுடன் ஆதார் எண்ணை இணைத்தால் மட்டுமே அரசின் சலுகைகள் மற்றும் மானியங்கள் வழங்கப்படும் என கூறப்பட்டது. 
 
அதில் முக்கியமாக ரேஷன் பொருட்களை பெறுவதற்கு ரேஷன் கார்டுடன் குடும்ப உறுப்பினர்களின் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என அரசு தெரிவித்தது.
 
இந்நிலையில், ஜார்கண்ட் மாநிலத்தில் ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்காத பயணாளிகளுக்கு ரேஷன் பொருட்கள் வழங்க மறுக்கப்பட்டது. 
 
இதனால், ஒரு சிறுமி உள்ளிட்ட மூன்று பேர் பட்டினியால் இறந்த சம்பவம் நிகழ்ந்தது. என்வே, ரேஷன் கார்டுடன் ஆதாரை இணைக்கவில்லை என்றாலும் ரேஷன் பொருட்களை வழங்கலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.