1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Subramanian Swamy silent in Sasikala issues

சசிகலாவிடம் அடிபணிந்த பொறுக்கி புகழ் சு.சுவாமி!!

சசிகலா
தமிழர்களை 'பொறுக்கி' என விமர்சித்து வரும் பாஜக எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி அதிமுக விவகாரங்களில் அடக்கி வாசித்து வருவதன் பின்னணி குறித்து பரபரப்பான தகவல்கள் வெளிவந்துள்ளது.


 
 
ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர், அதிமுக விவகாரங்களில் அதுவும் மன்னார்குடி கோஷ்டி, அதிமுகவை கைப்பற்றியது தொடர்பாக எதிர்ப்பை தெரிவிப்பார் சுப்பிரமணியன் சுவாமி என எதிர்ப்பார்க்கப்பட்டது.
 
அதேபோல், சசிகலாவுக்கு எதிராக சில கருத்துகளை கூறி வந்தார். ஆனால் திடீரென சசிகலா முதல்வராவார், ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தமிழக அரசை கலைக்க வேண்டும் என்றெல்லாம் கூறி பரபரப்பை கிளப்பினார் சுப்பிரமணியன் சுவாமி.
 
இந்த விவகாரத்தில் தமிழர்களை பொறுக்கிகள் எனவும் விமர்சித்து வருகிறார். அதே நேரத்தில் சசிகலா மீதான விமர்சனங்களையும் நிறுத்திவிட்டார். இதற்கு காரணம் சசிகலா தரப்பின் சமாதான முயற்சி என கூறப்படுகிறது. 
அடுத்த கட்டுரையில்
5 வயது சிறுமியை இடித்த லாரிக்கு தீவைப்பு