1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Sub-Inspector Raped 16 year old Girl

16 வயது சிறுமியை கற்பழித்த சப்-இன்ஸ்பெக்டர்

16 வயது சிறுமி
பெற்றோர்களை மிரட்டி 16 வயது சிறுமியை கற்பழித்த சப்-இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டார்.


 

 
மகாராஷ்டிரா மாநிலம் சாங்லி மாவட்டம் விஷ்ரம்பாக் காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிபவர் பிரேம் சுக்தேவ் பான்சோடே(26). இஅவர் வசிக்கும் பகுதியில் வாடை வீட்டில் வசிக்கும் 16 வயது சிறுமியை கற்பழித்துள்ளார்.  
 
சம்பவத்தன்று இரவு சப்-இன்ஸ்பெக்டர் பிரேம் சுக்தேவ் அந்தப் பெண்ணின் வீட்டுக்குள் புகுந்து, துப்பாக்கியை காட்டி பெற்றோர்களை மிரட்டி, பின்னர் அந்த சிறுமியை கற்பழித்தார். இச்சம்பவத்தை வெளியே சொன்னால் குடும்பத்தையே கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டியுள்ளார்.
 
அந்த குடும்பம் பாதிக்கப்பட்ட தங்களுக்கு ஏற்பட்ட கொடுமையை உயர் அதிகாரிகளை சந்தித்து முறையிட்டு புகார் மனு கொடுத்தார். அதன் பேரில் மாவட்ட கூடுதல் சூப்பிரண்டு தீபாலி காக்டே விசாரணை நடத்தி, சப்-இன்ஸ்பெக்டர் பிரேம் சுக்தேவ் கைது செய்தார். அவர் மீது கற்பழிப்பு, மிரட்டல் உள்பட பல பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
 
About Writer
Abimukatheesh
அடுத்த கட்டுரையில்
‘கொடுமை’ - கணவனை காண பச்சிளம் குழந்தையை தண்ணீர் தொட்டியில் வீசிய தாய்