ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : புதன், 6 மார்ச் 2024 (18:41 IST)

புதுச்சேரி சிறுமி படுகொலை..! த.வெ.க தலைவர் விஜய் கண்டனம்.!!

Vijay
புதுச்சேரியில் 9 வயது சிறுமியை படுகொலை செய்த கொலையாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை பெற்று தர வேண்டும் என்று  தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வலியுறுத்தியுள்ளார்.
 
புதுச்சேரியில் 9 வயது சிறுமி, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு பல்வேறு கட்சித் தலைவர்களும் தங்களது எதிர்ப்புகளை பதிவு செய்து வருகின்றனர்.
 
இந்நிலையில் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், புதுச்சேரி, முத்தியால்பேட்டையைச் சேர்ந்த 9 வயதுச் சிறுமி, பாலியல் துன்புறுத்தலால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம், நெஞ்சைப் பதற வைக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
 
பெற்ற மகளை இழந்து, பெருந்துயரத்துடன் உள்ள சிறுமியின் பெற்றோருக்குக் கனத்த இதயத்துடன் ஆறுதல் சொல்லக் கடமைப்பட்டுள்ளேன் என்று விஜய் தெரிவித்துள்ளார்.

 
சிறுமியை மிருகத்தனமாக, ஈவு இரக்கமின்றிப் படுகொலை செய்த கொலையாளிகளுக்குச் சட்டப்படி அதிகபட்ச தண்டனை பெற்றுத் தர, புதுச்சேரி அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழகம் சார்பில் விஜய் கேட்டுக் கொண்டுள்ளார்.