பள்ளி மேற்கூரை இடிந்து விழுந்து மாணவர்கள் காயம்... பரபரப்பு செய்திகள்
உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் உள்ள பள்ளி ஒன்றின் மேற்கூரை இடிந்து விழுந்து 50 க்கும் மேற்பட்ட குழந்தைகள் படுகாயம் அடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சில ஆண்டுகளுக்கு முன்பு, நம் தமிழ்நாட்டில் கும்பகோணத்தில் ஒரு தனியார் பள்ளியில் படித்து வந்த மாணவர்கள், அப்பள்ளியின் ஏற்பட்ட தீயில் கருகி பலியாகினர். இந்த சம்பவம் நாட்டையே உலுக்கி எடுத்தது. அதன் பின்னர் பல பள்ளிகளில் அடிப்படை வசதிகள் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டுமென அரசும் கல்வி நிர்வாகிகளும் ஆணை பிறப்பித்தனர். இருப்பினும் சிலர் அலட்சியத்தையே கடைபிடித்துவருகின்றனர்.
அந்த வகையில், உ.,பில் உள்ள மீரட் மாவட்டத்தில் உள்ள தபாத்துவா என்ற கிராமத்தில் ஒரு பள்ளி இயங்கிவந்தது. இந்நிலையில் இன்று, அந்த பள்ளிக்கூடத்தில் மேற்கூரை தீடீரென இடிந்து விழுந்தது. இதில் சிக்கிய குழந்தைகள் பலர் படுகாயம் அடைந்தனர். உடனடியாக அவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டுசென்றனர். தற்போது சிகிச்சை பெற்றுவரும் குழந்தைகள் 6 பேர் நிலை கவலைகரமாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.