செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 1 அக்டோபர் 2018 (16:45 IST)

ஒரே மாணவியை காதலித்த இருவர்: போதையில் நடந்த விபரீதம்..

தெலங்கானாவில் ஒரே மாணவியை காதலித்த இரு மாணவர்கள் போதையில் ஒருவர் மேல் ஒருவர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
தெலங்கானாவின் ஜக்தியால் நகரில் உள்ள மிஷனரி பள்ளியில் மகேந்தர் மற்றும் ரவி ஒரே வகுப்பில் படித்து வந்துள்ளனர். பெயர் வெளியிடப்படாத அந்த மாணவியும் அதே பள்ளியில் படித்து வந்துள்ளார். 
 
மகேந்தர் மற்றும் ரவி இருவரும் அந்த பெண்ணை காதலித்துள்ளனர். 16 வயதுள்ள இரு மாணவர்களும் மது அருந்திவிட்டு அந்த பெண்ணிற்காக தங்கள்மீது பெட்ரோல் ஊற்றிக்கொண்டு ஒருவருக்கொருவர் தீ வைத்துக் கொண்டுள்ளனர். 
 
இதில் மகேந்தர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார், ரவி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மாணவர்கள் தீக்குளித்த இடத்தில் பீர் பாட்டில்கள் கண்டெடுக்கப்பட்டது. 
 
இந்த சம்பவம் குறித்த விசாரணையில் உள்ள போலீஸார் இது கொலையா? அல்லது தற்கொலையா? என புரியாமல் குழம்பி வருகின்றனர்.