செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: திங்கள், 26 டிசம்பர் 2022 (17:37 IST)

காதலனுக்கு பதிலாக தேர்வெழுதிய மாணவி: பிடிபட்டதால் நேர்ந்த விபரீதம்!

exam
குஜராத் மாநிலத்தில் காதலனுக்கு பதிலாக தேர்வு எழுதிய மாணவி ஒருவர் தனது படிப்பை இழந்த தகவல் தற்போது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
குஜராத் மாநிலத்தில் கல்லூரி மாணவி ஒருவர் தனது காதலனுக்காக தேர்வு எழுத முடிவு செய்தார். தனது காதலன் சுற்றுலா சென்று இருப்பதால் அவருக்காக தேர்வு எழுத திட்டமிட்ட அவர் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதினார்
 
அப்போது தேர்வறையில் சந்தேகமடைந்த தேர்வு அலுவலர் அந்த மாணவியிடம் விசாரணை செய்தபோது அவர் ஆள்மாறாட்டம் செய்தது உறுதி செய்யப்பட்டது. 
 
 இதனையடுத்து தண்டனையாக அவர் தனது படிப்பை பரிதாபமாக இழந்துவிட்டார். காதலனுக்காக தேர்வு எழுதியது கண்டுபிடித்த தகவல் அறிந்த அந்த மாணவி படிக்கும் கல்லூரி நிர்வாகம் அவரை டிஸ்மிஸ் செய்து உள்ளது. அது மட்டுமின்றி அவருடைய காதலன் மூன்று வருடத்திற்கு தேர்வு எழுத தடை விதிக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran