10ஆம் வகுப்பு மதிப்பெண்ணில் இருந்து விலக்கு: தேசிய தேர்வு முகமைக்கு அன்புமணி வேண்டுகோள்
தேசிய தேர்வு முகமை நடத்தும் ஜே.ஈ.ஈ. நுழைவுத் தேர்வில் பத்தாம் வகுப்பு மதிப்பெண்களும் குறிப்பிட வேண்டும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ள நிலையில் தமிழகத்திற்கு இதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி வேண்டுகோள் விடுத்துள்ளார்
ஜே.ஈ.ஈ. நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்பத்தில் பத்தாம் வகுப்பு மதிப்பெண்ணை குறிப்பிடுவதிலிருந்து தமிழ்நாடு மாணவர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்றும் இரண்டு ஆண்டுகளுக்கு முன் 10ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கப் படவில்லை என்றும் டாக்டர் அன்புமணி குறிப்பிட்டுள்ளார்
இதனால் தமிழகத்தில் உள்ள மாணவர்கள் ஜே.ஈ.ஈ. நுழைவுத் தேர்வு எழுதும் விண்ணப்பத்தில் பத்தாம் வகுப்பு மதிப்பெண் குறிப்பிட முடியாத நிலை உருவாகி உள்ளது என்றும் இதனால் தேசிய தேர்வு முகமைக்கு தமிழ்நாடு அரசு புரியவைத்து தமிழக மாணவர்களுக்கு பத்தாம் வகுப்பு மதிப்பெண்ணை பதிவு செய்வதிலிருந்து விலக்கு பெற்று தரவேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
Edited by Mahendran