1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : திங்கள், 2 ஜனவரி 2023 (17:35 IST)

மாணவியை கத்தியால் குத்தி தன்னையும் குத்தி கொண்ட மாணவன்: ஒருதலை காதலால் விபரீதம்!

knife
ஒருதலைக் காதலால் கல்லூரி மாணவர் ஒருவர் மாணவியை கத்தியால் குத்திவிட்டு தன்னைத் தானே குத்திக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பவன் கல்யாண் என்ற 23 வயது கல்லூரி மாணவர் அதே பகுதியை சேர்ந்த 19 வயது மாணவி ஒருவரை ஒருதலையாக காதலித்து வந்ததாக தெரிகிறது 
 
ஆனால் மாணவி அவருடைய காதலை ஏற்கவில்லை என்றும் நட்பாகத்தான் பழகுகிறேன் என்று கூறியுள்ளார். இதனையடுத்து இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில் திடீரென பவன்கல்யாண் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மாணவியை சரமாரியாக குத்தியுள்ளார்
 
இதனை அடுத்து ரத்த வெள்ளத்தில் அதே இடத்தில் சரிந்த மாணவியை பார்த்து பவன் கல்யாண் அதிர்ச்சி அடைந்தார். இந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட மாணவி இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது. இதனை அடுத்து போலீஸ் விசாரணைக்கு பயந்து மாணவர் பவன் கல்யாண் தன்னைத் தானே கத்தியால் குத்திக் கொண்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் கல்லூரி வளாகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Siva