திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 22 டிசம்பர் 2017 (21:58 IST)

ஆசிரியருக்கு மசாஜ் செய்யும் மாணவன்: வைரல் வீடியோ!!

மத்திய பிரதேச மாநிலத்தில் ஆசியர் ஒருவருக்கு மாணவர் பள்ளி வருப்பறையில் மாசாஜ் செய்ய வீடியோ இணையத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் மதியதஹ் அருகே தாமோஹ் பகுதியில் அரசு பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அங்கு பணியாற்றி வரும் ஆசிரியர் ஒருவர் உடல்வலியால் மாணவன் ஒருவரை கால்களால் மசாஜ் செய்ய வைத்துள்ளார். 
 
இதுதொடர்பான வீடியோ வெளியாகி, சமூகவலைத்தளங்களில் வைரலானது. இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நிகழ்வதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து மாநில பள்ளிக்கல்வித்துறை உடனடியாக விசாரணை நடத்த மாவட்ட கல்வி அதிகாரிக்கு உத்தரவிட்டுள்ளது.
 
இதேபோல் சமீபத்தில் மத்தியப்பிரதேச மாநிலத்தில் கல்வி அமைச்சர் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள் டீ, ஸ்னாக்ஸ் பரிமாறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.