திங்கள், 30 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 8 டிசம்பர் 2017 (17:56 IST)

8-ம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு தீவைத்து எரிப்பு

மத்திய பிரதேசத்தில் 8-ம் வகுப்பு மாணவியை இரண்டு கொடூரர்கள் சேர்ந்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததோடு, அச்சிறுமியை தீவைத்து எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேசம் சாகர் மாவட்டம் தேவல் கிராமத்தில்  8ம் வகுப்பு படிக்கும் சிறுமி ஒருவர் வீட்டில் தனியாக இருந்ததை நோட்டமிட்ட 2 இளைஞர்கள்  அவரது வீட்டிற்குள் புகுந்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து உள்ளனர். பின்னர் வீட்டில் இருந்த மண்ணெண்ணையை சிறுமி மீது ஊற்றி தீவைத்து  விட்டு ஓடி விட்டனர். சிறுமியின் அலறல் சத்தத்தை கேட்ட அக்கம் பக்கத்தினர் சிறுமியை மீட்டு பண்டல்கண்ட் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில்  சேர்த்தனர். அங்கு சிறுமி ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
 
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்ததில், அதே கிராமத்தைச் சேர்ந்த  ராகவேந்திரா சென், ஷுப்ஹம் யாதவ் தான் குற்றவாளிகள் என கண்டுபிடித்துள்ளனர். இதில் ஒரு குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.