ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 14 செப்டம்பர் 2020 (16:53 IST)

வீடியோ காலில் வந்து அதை காட்டிய ஆசாமி! – அதிர்ச்சியடைந்த பெண்!

மகாராஷ்டிராவில் வீடியோ காலில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத் பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கு தெரியாத ஒரு எண்ணிலிருந்து ஆசாமி ஒருவர் வாட்ஸப்பில் அடிக்கடி பாலியல் குறுஞ்செய்திகளும், படங்களும் வந்துள்ளார். ஆனால் அதை கண்டுகொள்ளாமல் அந்த பெண் விட்டுவிட்டார். இந்நிலையில் அந்த பெண்ணுக்கு சமீபத்தில் அந்த எண்ணிலிருந்து வீடியோ அழைப்பு வந்துள்ளது.

அதை அட்டெண்ட் செய்த போது அந்த ஆசாமி வீடியோ காலில் தனது ஆண் உறுப்பை காட்டி அந்த பெண்ணை பாலியல் தொடர்புக்கு அழைத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் இதுகுறித்து தனது கணவரிடம் தெரிவித்துள்ளார். அவர் அவுரங்காபாத் காவல்நிலையத்தில் இதுகுறித்து அளித்துள்ள புகாரின் பெயரில் போலீஸார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். பெண்ணுக்கு வீடியோ கால் மூலமாக வந்த பாலியல் தொல்லை சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.