1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : திங்கள், 27 மார்ச் 2023 (16:11 IST)

பள்ளிக்கூட்டத்தில் படுக்கையறை: ஆணுறைகள், மதுபானம் கண்டுபிடிப்பு: முதல்வர் கைது

பள்ளிக்கூடத்தில் படுக்கையறை இருந்ததாகவும் அதில் ஆணுறைகள் மற்றும் மதுபானம் இருந்ததாகவும் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து அந்த பள்ளியின் முதல்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன 
 
மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள பள்ளிக்கூடம் ஒன்றில் திடீரென சோதனை நடத்தப்பட்டதில் மதுபானம், ஆணுறைகள் கண்டுபிடிக்கப்பட்டது. அது மட்டும் இன்றி படுக்கை அறை ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிகிறது. 
 
இந்த நிலையில் இது குறித்து ஆய்வு செய்த மாவட்ட கலெக்டர் ’பள்ளிக்கூடத்தில் ஆட்சியபனைக்குரிய பொருட்கள் இருந்தது குறித்து  போலீசார் முழு விசாரணை செய்ததாகவும் இதனை அடுத்து வழக்கு பதிவு செய்து பள்ளி முதல்வர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 
 
கட்டிடத்தின் மற்ற இடங்களில் சிசிடிவி பொருத்தப்பட்டிருந்தாலும் படுக்கையறை அருகே சிசிடிவி பொருத்தப்படவில்லை என்றும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் பள்ளிக்கூடத்தில் 15 படுக்கை அறைகள் இருந்ததாகவும் பள்ளிக்கூடத்தில் எதற்காக படுக்கை அறைகள் என்றும் விசாரணை நடந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த தகவல் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது மற்றும்
 

Edited by Siva