வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 20 ஜனவரி 2023 (19:30 IST)

சாலை விபத்து: இளைஞரின் வயிற்றில் துளைத்துச் சென்ற அடிபம்பு!

andra
ஆந்திராவில் விபத்தில் சிக்கியவரின் வயிற்றை துளைத்துச் சென்ற அடிபம்பின் கைப்பிடி கட்டிங் மெஷின் மூலம் வெட்டி எடுக்கப்பட்டது.

ஆந்திர மாநிலம் பிரகாசம் என்ற மாவட்டத்தைச் சேர்ந்தவர்  நாகராஜ்.  இவர் பணி முடிந்து, இன்று வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தார்.

அப்போது, சாலையோரம் இருந்த அடிபம்பு மீது இருசக்கர வாகனம் மோதி விபத்திற்குள்ளானது.

இதில், அடிபம்பின் கைப்படி,நாகராஜின் வயிற்றில் துளைத்துக் கொண்டு சென்றது.

இதையடுத்து, அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டுசென்றனர்.

அங்கு, கட்டிங்க்  இயந்திரம் மூலம் பம்ப் கைப்பிடி வெட்டி எடுக்கப்பட்டது.