வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : திங்கள், 6 ஏப்ரல் 2020 (17:45 IST)

கொரோனா தடுப்புக்காக மாநிலங்களுக்கு மேலும் ரூ.3,000 கோடி நிதி - - சுகாதாரத்துறை

சீனாவில் இருந்து இந்திய உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் கொரோனா வைரஸ் பரவிவருகிறது. இந்தியாவில் கொரோனா பாதிப்புகளைத் தடுக்க, மத்திய அரசு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளது.

அதனால், பல்வேறு மாநிலங்களும் தங்களுக்கு நிவாரண உதவி வழங்கவேண்டுமென மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துவருகிறது.

இந்நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு மாநிலங்களுக்கு மேலும் ரூ.3,000 கோடி நிதி வழங்குவதாகவும் ஏற்கெனவே ரூ.1,100 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது  என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கொரோனா சிகிச்சைக்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயினை பரிந்துரைக்க போதுமான சான்றுகள் இல்லை என  இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் தகவல் தெரிவித்துள்ளது.

மேலும், புதிதாக 5 லட்சம் கொரோனா பரிசோதனை கருவிகளுக்கு ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் வரும் ஏப்ரல் 8-9 தேதிகளில் 2.5 லட்சம் கருவிகள் வழங்கப்படும் என  ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.

தமிழகத்திற்கான  நிவாரண உதவியை, முதல்வர் எடப்பாடி பழனிசாமி மத்திய அரசிடம் கோரியிருந்த நிலையில் மத்திய அரசு முதற்கட்டமாக ரூ.500 கோடியை வழங்கியுள்ளதாக  முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.