1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj
Last Modified: புதன், 27 அக்டோபர் 2021 (17:17 IST)

’இல்லம் தேடி கல்வி’ திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின்

இல்லம் தேடி கல்வி திட்டத்தை இன்று முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார்.

தமிழகத்தில் சமீபத்தில் நடைபெற்ற சட்டபேரவைத் தேர்தலில் ஸ்டாலின் தலைமையிலான திமுக வெற்றி பெற்று ஆட்சி பொறுப்பேற்றுள்ளது.

இந்நிலையில், முதல்வர் ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி வருகிறார்.

இந்நிலையில் இன்று இல்லம் தேடி கல்வி என்ற திட்டத்தைத் தொடங்கிவைத்துள்ளார்.

இத்திட்டத்தைத் தொடங்கிவைத்து பேசிய முதல்வர் ஸ்டாலின்  இல்லம் தேடி கல்வி திட்டத்தை உருவாக்கிய அன்பின் மகேஷுக்கு பாராட்டுகள்; இத்திட்டம் பல்வேறு மாணவர்களின் வாழ்வில் ஒளியேற்றும் எனவும் மிகப்பெரிய புரட்சிக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.