1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. SSLV lost its sattelites before the orbit in space

சுற்றுப்பாதை செல்லும் முன்னே வெளியேறிய செயற்கைக்கோள்கள்! – எஸ்.எஸ்.எல்.வி பயணம் தோல்வி!

SSLV
இஸ்ரோ இன்று விண்ணில் ஏவிய எஸ்.எஸ்.எல்.வி ராக்கெட் செயற்கைக்கோள்கள் சுற்றுவட்டப்பாதையை அடையாமல் தோல்வியை சந்தித்துள்ளது.

விண்வெளி அறிவியல் மற்றும் ராக்கெட் ஏவுதலில் பல்வேறு மைல்கல்களை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ தொட்டுள்ளது. முன்னதாக பி.எஸ்.எல்.வி, ஜி.எஸ்.எல்.வி ராக்கெட்டுகளை ஏவிய இஸ்ரோ புதிய முயற்சியாக எஸ்.எஸ்.எல்.வி ராக்கெட் ஏவுதலில் ஈடுபட்டது.

எஸ்.எஸ்.எல்.வி ராக்கெட் சிறிய செயற்கைக்கோள்களை சிறிய பட்ஜெட்டில் ஏவுவதற்காக உருவாக்கப்பட்டுள்ளது. முந்தையை ஜி.எஸ்.எல்.வி, பி.எஸ்.எல்.வி செயற்கைக்கோள்களை விட எஸ்.எஸ்.எல்.வி சிறிய ரக ராக்கெட் ஆகும்.

பள்ளி மாணவர்கள் உருவாக்கிய செயற்கைக்கோள் மற்றும் நில ஆய்வு செயற்கைக்கோள்களை சுமந்து கொண்டு இந்தியாவின் முதல் எஸ்.எஸ்.எல்.வி டி1 (SSLV D1) ராக்கெட் இன்று விண்ணில் ஏவப்பட்டது.

ஆனால் விண்வெளியை அடைந்தபோது செயற்கைக்கோள்களிலிருந்து சிக்னல் கிடைக்கவில்லை. சோதனையில் ராக்கெட் 3ம் கட்டத்திலிருந்து 4ம் கட்டத்திற்கு முன்னேறிக் கொண்டிருந்தபோதே செயற்கைக்கோள்கள் வெளியேறிவிட்டது தெரிய வந்துள்ளது. இதனால் இந்த ராக்கெட் ஏவுதல் தோல்வியில் முடிந்துள்ளது.
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
அழக்கூடாது.. இன்னும் நிறைய சாதிக்கணும்! – வீராங்கனைக்கு பிரதமர் மோடி ஆறுதல்!