1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 9 ஜனவரி 2024 (10:25 IST)

மகரஜோதி தரிசனம்.. ஸ்பாட் புக்கிங் நிறுத்தம்.. 40,000 பேருக்கும் மட்டும் அனுமதி: தேவஸ்தானம்

சபரிமலையில் மகரஜோதி தரிசனத்தை முன்னிட்டு நாளையுடன் ஸ்பாட் புக்கிங் நிறுத்தப்படும் என்றும், மகரஜோதி நாளன்று 40,000 பேருக்கும் மட்டும் சாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்படும் என்றும் சபரிமலை தேவசம்போர்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 
ஜனவரி 15ஆம் தேதி சபரிமலையில் மகர விளக்கு பூஜை நடைபெற உள்ளது. இதனையொட்டி 14ஆம் தேதி 50,000 பக்தர்களுக்கு மட்டுமே சாமி தரிசனத்திற்கு அனுமதி என தேவசம்போர்டு தெரிவித்துள்ளது. 
 
மேலும் சபரிமலை மகரஜோதி தரிசனத்திற்கு ஸ்பாட் புக்கிங் முறை நிறுத்தப்பட்டுள்ளது. 40,000 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
 
 ஸ்பாட் புக்கிங் முறை நிறுத்தப்பட்டுள்ளதால், பக்தர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆன்லைன் முன்பதிவு ஜனவரி 10 ஆம் தேதி காலை 10 மணிக்கு தொடங்கும்.  ஒரு நபருக்கு ஒரு டிக்கெட் மட்டுமே வழங்கப்படும்.
பக்தர்கள் தரிசனத்திற்கு செல்லும் போது, அடையாளச் சான்று மற்றும் கொரோனா தடுப்பூசி சான்றிதழை காண்பிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran