1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வெள்ளி, 5 ஜனவரி 2024 (08:00 IST)

10 வயதில் 50வது முறையாக சபரிமலை செல்லும் சிறுமி.. 9வது மாதத்தில் முதல்முறை என தகவல்..!

கேரளாவை சேர்ந்த 10 வயது சிறுமி 50வது முறையாக சபரிமலை செல்வதாக கூறியுள்ள நிலையில் அவருக்கு சபரிமலை பக்தர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 
 
கேரளாவை சேர்ந்த அபிலாஷ் மணி என்பவரின் மகள் அதிதி. இவர் தனது ஒன்பது மாத 9 மாத குழந்தையாக இருந்த போது தனது தந்தையுடன் முதல் முறையாக சபரிமலை சென்று ஐயப்பனை தரிசித்ததாகவும் அதன் பிறகு ஒவ்வொரு ஆண்டும் மாதாந்திர பூஜை, மண்டல பூஜை, மகர விளக்கு பூஜை ஆகிய நேரத்தில் சபரிமலை சென்றுள்ளதாகவும் தெரிகிறது. 
 
இதன் காரணமாக 10 வயது ஆகும் இந்த சிறுமி 50வது முறையாக தற்போது சபரிமலைக்கு செல்ல உள்ளதை அடுத்து அவருக்கு ஐயப்ப பக்தர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர் 
 
அதிதி கேரளாவில் உள்ள பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வருகிறார் என்பதும் தனது தந்தையுடன் இருமுடி கட்டி 50வது முறையாக சபரிமலை செல்லும் புகைப்படத்தை அவர் வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படம் வைரல் ஆகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva