செவ்வாய், 31 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 12 ஜனவரி 2022 (11:14 IST)

பிரதமர் பாதுகாப்பில் குறைபாடு; விசாரிக்க 4 பேர் கொண்ட குழு!

பஞ்சாப் சென்ற பிரதமர் மோடிக்கு ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடு குறித்து விசாரிக்க 4 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிரதமர் மோடி பஞ்சாப் மாநிலத்தில் அரசு நலத்திட்ட விழாவில் கலந்துகொள்ள வருகை தந்தார். அப்போது அவரது வருகையை எதிர்த்து பஞ்சாப் மாநில விவசாயிகள் நடத்திய போராட்டம் காரணமாக நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாமல் அவர் டெல்லி திரும்பி சென்றார். பாதுகாப்பு குளறுபடி காரணமாகவே இந்த நிகழ்வு நடந்ததாக கூறப்பட்டது. 

பிரதமர் பாதுகாப்பில் குறைபாடு ஏற்பட்டது குறித்து பலரும் கண்டனம் தெரிவித்த நிலையில் இதுகுறித்து விசாரணை குழு அமைக்கப்படும் என உள்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது. அதன்படி தற்போது பிரதமர் மோடியின் பயணத்தில் ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடு குறித்து விசாரணை மேற்கொள்ள ஓய்வு பெற்ற நீதிபதி இந்து மல்கோத்ரா தலைமையில் 4 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு குறைபாடு தொடர்பாக விரைவில் இந்த குழு அறிக்கையை சமர்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.