திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 12 ஏப்ரல் 2021 (11:49 IST)

மாணவர்கள் பாவம்; பொதுத்தேர்வை ரத்து செய்யுங்க! – சோனு சூட் கோரிக்கை!

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வை ரத்து செய்ய நடிகர் சோனு சூட் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கடந்த ஒரு ஆண்டிற்கும் மேலாக இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு இருந்து வரும் நிலையில் மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து புகழ்பெற்றவர் பாலிவுட் நடிகர் சோனுசூட். தற்போது இந்தியாவில் மீண்டும் கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்துள்ள நிலையில் பள்ளி மாணவர்களுக்கு தேர்வு நடத்துவதில் பல மாநிலங்கள் மும்முரம் காட்டி வருகின்றன.

இந்நிலையில் இதுகுறித்து வேண்டுகோள் விடுத்துள்ள நடிகர் சோனு சூட் “10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான சிபிஎஸ்சி தேர்வு மற்றும் பொதுத்தேர்வுகளை அரசு ரத்து செய்ய ஆலோசனை செய்ய வேண்டும். கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில் மாணவர்கள் படிப்பதில் சிரமம் உள்ளது” என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.