வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வெள்ளி, 16 பிப்ரவரி 2024 (07:59 IST)

மக்களவை தேர்தலில் போட்டி இல்லை.. ரேபேலி மக்களுக்கு சோனியா காந்தி உருக்கமான கடிதம் ..

மக்களவைத் தேர்தலில் போட்டியில்லை என்று முடிவெடுத்த சோனியா காந்தி தான் போட்டியிட்டு வெற்றி பெற்ற ரேபேலி தொகுதி மக்களுக்கு உருக்கமாக கடிதம் எழுதியுள்ளார் 
 
வரும் ஏப்ரல் மாதம் பாராளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் சோனியா காந்தி மீண்டும் ரேபேலி தொகுதியில் போட்டியிடுவார் என்றும் புதுச்சேரியில் போட்டியிடுவார் என்றும் பல்வேறு செய்திகள் வெளியாகின. 
 
இந்த நிலையில் அவர் தற்போது மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட மனுதாக்கல் செய்துள்ள நிலையில் மக்களவைத் தேர்தலில் போட்டியில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 
 
இந்த நிலையில் அவர் ரேபேலி தொகுதி மக்களுக்கு எழுதிய உருக்கமான கடிதத்தில் நான் இன்று உயர்ந்த நிலையில் இருக்க ரேபேலி தொகுதி மக்கள் ஆகிய நீங்கள் தான் காரணம் என பெருமையுடன் கூறுவேன். உங்கள் நம்பிக்கையை காப்பாற்ற நான் எப்போதும் என்னால் முடிந்த அனைத்தையும் செய்து உள்ளேன். 
 
தற்போது உடல்நிலை மற்றும் வயது மூப்பு காரணமாக மக்களவைத் தேர்தலில் என்னால் போட்டியிட முடியவில்லை. இந்த முடிவுக்கு பின் என்னால் நேரடியாக உங்களுக்கு சேவை செய்ய முடியாவிட்டாலும் என்னுடைய மனதும் எண்ணங்களும் உங்களுடனே இருக்கும் என்று உருக்கமாக எழுதியுள்ளார்.
 
Edited by Siva