செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : சனி, 1 ஜூன் 2019 (15:31 IST)

மீண்டும் தலைவரானார் சோனியா: காங்கிரஸ் கூட்டத்தில் ஒருமனதாக முடிவு!!

காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்றக் குழு தலைவராக சோனியா காந்தி தேர்வு செய்யப்பட்டுள்ளார். 
 
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் மோடி தலைமையில் ஆட்சி அமைத்தது. வெறும் 52 இடங்களை மட்டுமே பெற்றதால், எதிர்க்கட்சி அந்தஸ்தை 2வது முறையாக இழக்கும் நிலைமை காங்கிரசுக்கு ஏற்பட்டுள்ளது.
 
இந்நிலையில் ஏற்கனவே அறிவித்தது போல காங்கிரஸ் நாடாளுமன்றக் குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற மக்களவை குழுவின் புதிய தலைவராக சோனியா காந்தி மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். 
 
சோனியா காந்தியின் பெயரை முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பரிந்துரைத்தார். மன்மோகன் சிங் முன்மொழிய, சோனியாவை தலைவராக எம்.பி.க்கள் தேர்வு செய்தனர். மக்களவை மற்றும் மாநிலங்களவை தலைவராக சோனியா காந்தி செயல்படுவார். 
 
கடந்த மக்களவையில் காங்கிரஸ் குழு தலைவராக இருந்த மல்லிகார்ஜுன கார்கே, இந்த முறை தேர்தலில் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.