1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 30 மே 2019 (20:38 IST)

மு.க. ஸ்டாலின் நெற்றியில் பொட்டு ! கவனித்தீர்களா... ?

பெரியார் தொடங்கிய திராவிடர் கழகத்திலிருந்து  கருத்து வேறுபாடு காரணமாக பேரறிஞர் அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தைத் தொடங்கினார்.  அதில் அண்ணாவுடன் நெடுஞ்செழியன், ஈ.வி.கே. சம்பத், அன்பழகன், கருணாநிதி போன்ற தம்பிகளும் இணைந்தனர்.குறுகிய காலத்தில் திமுக மக்களிடம் பிரபலம் ஆயிற்று. அதற்கு அண்ணாவின் அறிவாற்றலுடன் தம்பிகளில் உழைப்பும், செயல்பாடும் சேர்ந்து கழகத்திற்கு புத்தூயிரூட்டியது.
இமயமலையாக அன்றையகாலத்தில் எழுந்து நின்ற காங்கிரஸ் கட்சியை ஓரங்கட்டி, அண்ணா ராஜாஜியுடன் கூட்டணி அமைத்து வெற்றிபெற்றது சரித்திரம்.
 
பெரியார் போற்றிய பகுத்தறிவு என்ற  குருகுலத்தில் இருந்து வந்த அண்ணாவும் அவரது தம்பிமார்களும் பகுத்தறிவை நன்கு வளர்த்தனர். கலைஞர் வசனங்களிலும் அதைக் காணலாம். அண்ணா ஒருமுறை நான் பிள்ளையார் சிலையையும் உடைக்க மாட்டேன், பிள்ளையாருக்கு தேங்காயும் உடைக்கமாட்டேன் என்றார்.
 
பெரியாரோ, நான் இந்துக்களை வெறுப்பவன் அல்ல. மாறாக இந்து மதத்தில் காணப்படும் உயர்வு, தாழ்வு வேற்றுமைகள், சாதிகளால் உண்டான பாகுபாடுகளைக் களையத்தான் போராடுகிறேன் என்றார்.
அவர் வழிவந்த கலைஞரும் நாத்திகர் தான்! அவருடைய மகனான ஸ்டாலினும் ஒரு நாத்திராக நாட்டுக்கு அறியபட்டவர்தான்.  ஒருமுறை ஸ்டாலின் நெற்றியில் வைத்த பொட்டை அழித்தற்காக அவர் மீது பலர் குற்றம்சாட்டினார்கள்.
 
அதன்பின்னர் தனது வீட்டினர் இந்து கோவில்களுக்கு செல்கிறார்கள் என்று தெரிவித்ததாக செய்திகள் வெளியானது. 
 
இந்நிலையில் திமுக ஆட்சியில் இல்லாவிட்டாலும் கூட மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின் போது மக்களுடன் மக்களாக களத்திற்குச் சென்று, மக்களை நேரடியாகச் சந்தித்து அவர்களின் குறைகளைக்கேட்டறிந்தார். அதன் விளைவுதான் மக்களவைத் தேர்தலில் திமுகவுக்கு  ஓட்டு போட்டு இந்தியாவில் 3வது பெரிய கட்சியாக வளர்த்துவிட்டுள்ளனர். 
 
இந்நிலையில் அண்டைமாநிலமான ஆந்திராவில் நடைபெற்ற சட்டமன்ற - மக்களவைத் தேர்தலில் மிகப்பெரும் வெற்றிபெற்று இன்று ஆட்சி பொறுப்பேற்கவுள்ள ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன்ரெட்டி, அன்புடன் மரியாதை நிமித்தமாக ஸ்டாலினுக்கு அழைப்புவிடுத்தார்.
 
நல்லமுறையில் இன்று காலைமுதல் இப்பதவியேற்பு விழா நடைபெற்றுவருகிறது. இதில் கலந்துகொண்ட ஸ்டாலின் ஜெகனுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தார். அப்போது அவரது நெற்றியில் ஒரு குங்குமப்பொட்டுவைத்திருந்த வீடியோ, புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வேகமாகப் பரவிவருகிறது.

அடிக்கடி சமூகவலைதளங்களில் நெட்டிஷன்களின் கவனத்துக்கு வரும் ஸ்டாலின், இன்று நெற்றியில் குங்குமப்பொட்டுவைத்துள்ளதாக எழுந்துள்ள  இவ்விஷயத்துக்கும் கவனிக்கப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இதனையடுத்து பேசிய ஜெகன்மோகன் ரெட்டி, கடவுள் ஆசீர்வாதத்தில் ஸ்டாலின் விரைவில் முதல்வராக வேண்டும் என்று கூறினார்.