செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinojkiyan
Last Updated : ஞாயிறு, 3 நவம்பர் 2019 (10:24 IST)

‘தலைப்புச் செய்தி’களை இட்டு நிரப்பும் பிரமர் மோடி - சோனியா காந்தி குற்றச்சாட்டு

கடந்த மே மாதத்தில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பாஜக கட்சி வெற்றி பெற்றி இரண்டாவது முறையாக மத்தியில் ஆட்சி அமைத்துள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில் நாட்டுக்குத் தேவையுள்ள   பல அதிரடியான மாற்றங்கள் இருந்தாலும் தற்போதுள்ள நாட்டில் நிலவும் பொருளாதார மந்த நிலை வேலைவாய்ப்பின்மை ஆகியவற்றால் மக்களும் அதிருப்தி அடைந்துள்ளதாகவே அரசியல் விமர்சகர்கள் கருதுகிறார்கள்.
இருப்பினும் சமீபத்தில் நடைபெற்று முடிந்த மஹாராஷ்டிரா மற்றும் ஹரியான ஆகிய மாநிலங்களிலும் பாஜகவின் கை ஓங்கியே காணப்பட்டது.
 
இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி,  ’நாட்டின் பொருளாதார நிலைமை பற்றி மோடிக்கு அக்கறை இல்லை. தலைப்புச் செய்திகளை இட்டு நிரப்புவதில்தான் அவர் குறியாக இருக்கிறார்’ என விமர்சித்துள்ளார்.