படேல் சிலைக்கு மோடி மரியாதை..
சர்தார் வல்லபாய் படேலின் 144 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் மோடி குஜராத்தில் உள்ள படேல் சிலைக்கு மரியாதை செலுத்தினார்.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சர்தார் வல்லபாய் படேலின் பிரம்மாண்ட சிலை ஒன்று குஜராத்தில் பிரதமர் நரேந்திர மோடியால் திறக்கப்பட்டது. இந்த சிலைக்கு “ஸ்டேச்சு ஆஃப் யுனைட்டி” என்று பெயர் வைத்தனர். நர்மதா நதிகரையில் அமைந்துள்ள இந்த சிலையை காண உலகின் பல பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பயணிகள் வந்த வண்ணம் உள்ளன.
இந்நிலையில் இன்று இந்தியாவின் இரும்பு மனிதர் என்று அழைக்கப்படும் சர்தார் வல்லபாய் படேலின் 114 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு அவரது சிலைக்கு இன்று மோடி நேரில் சென்று மரியாதை செலுத்தினார். மேலும் “படேலின் நிர்வாகத் திறமைக்கு நாம் அனைவரும் அவரை நினைவு படுத்த வேண்டும்” என தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, தனி தனியாக இருந்த மாகாணங்களை ஒன்றாக இணைத்து ”இந்தியா” என்ற நாடாக உருமாற்றிய பெருமைக்குரியவர் சர்தார் வல்லபாய் படேல் என்பது குறிப்பிடத்தக்கது.