வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 28 நவம்பர் 2017 (14:17 IST)

தாயின் பிரசவ கட்டணத்திற்கு தெருவில் பிச்சை எடுத்த 7வயது மகன்

பாட்னாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண்ணின் 7வயது மகன் மருத்துவ செலவுக்கான கட்டணத்தை செலுத்த தெருவில் பிச்சை எடுத்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.


 
பீகார் தலைநகர் பாட்னாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் லலிதா தேவி(31) என்ற பெண் கடந்த 14ஆம் தேதி பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். முதலில் ரூ.1.5 லட்சம் கட்டணம் செலுத்த வேண்டும் என மருத்துவ நிர்வாகம் லலிதா குடும்பத்தாரிடம் கூறியுள்ளனர். பின் ரூ.75 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும் என கூறியுள்ளனர்.
 
ஆனால் லலிதா தேவியின் கணவர் ரூ.25,000 மட்டுமே செலுத்தியுள்ளார். இதனால் மீதமுள்ள கட்டணத்தை செலுத்திய பிறகு லலிதா தேவியை டிஸ்சார்ஜ் செய்வோம் என மருத்துவ நிர்வாகம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.
 
இதனால் லலிதா தேவியின் 7வயது மகன் தன் தாயின் மருத்துவ கட்டணத்திற்காக தெருவில் பிச்சை எடுத்துள்ளான். இந்த சம்பவம் உள்ளூர் தொலைக்காட்சியில் வெளியானது. இதனை பார்த்த மதேபுரா எம்.பி. பப்பு யாதவ் உடனடியாக நடவடிக்கை எடுத்து தாயையும், மகனையும் மீட்டார். மேலும் மருத்துவமனைக்கு எதிராக எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.