செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: சனி, 25 நவம்பர் 2017 (04:04 IST)

ஓங்கி அறைந்தால் ஒரு கோடி ரூபாய் பரிசு: பாஜகவின் தொடரும் அட்டூழியம்

பத்மாவதி படப் பிரச்சனையின்போது அந்த படத்தின் இயக்குனர் சஞ்சய்லீலா பன்சாலி
மற்றும் தீபிகா படுகோனே ஆகியோர்களின் தலைகளை கொண்டு வந்தால் ரூ.10 கோடி பரிசு என பாஜக தலைவர் ஒருவர் சர்ச்சைக்குரிய  வகையில் பேசிய பரபரப்பே இன்னும் அடங்கவில்லை. இந்த நிலையில் பீகார் முன்னாள் முதல்வர் லாலுபிரசாத் யாதவ் மகனை ஓங்கி அறைபவர்களுக்கு ஒரு கோடி ரூபாய் பரிசு என  பாட்னா மாவட்ட பாஜக ஊடக தொடர்பாளர் அனில் சானி கூறியுள்ளார்.

ஓங்கி அறையும் அளவிற்கு லாலு மகன் அப்படி என்னதான் கூறினாராம்? பீகார் துணைமுதலமைச்சர் சுஷில்குமார் மோடியின் வீடு புகுந்து தாக்குவோம் என்று சமீபத்தில் வெளியான வீடியோவில் லாலு மகன் தேஜ் பிரதாப் யாதவ் பேசியுள்ளார்.

இதனையடுத்துதான் சுஷில்குமாரின் ஆதரவாளர்கள் இந்த பரிசுத்தொகையை அறிவித்துள்ளனர். இருப்பினும் அனில்சானியின் இந்த பேச்சு கண்டிக்கத்தக்கது என்றும் அவர் மீது கட்சியின் தலைமை நடவடிக்கை எடுக்கும் என்றும் பாஜக தலைவர் ஒருவர் கூறியுள்ளார்.