வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Modified: செவ்வாய், 11 ஆகஸ்ட் 2020 (16:44 IST)

ராசி இல்லை … 8 படங்களில் இருந்து நீக்கினார்கள்… ஒதுக்கினார்கள்- முன்னணி நடிகை வேதனை!

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம்வருபவர் வித்யாபாலன்.  இவரது ஆரம்பகாலம் கோலிவிட்டில் இருந்து தொடங்கவேண்டியதாக இருந்தாலும் அவரது திறமையை தமிழ் சினிமா கண்டுகொள்ளவில்லை.

பின்னர் பாலிவுட்டில் நுழைந்து வெற்றிக்கொடி நாட்டி, தேசிய விருது பெற்றார். இந்நிலையில் வித்யா பாலன், தன்னை ராசியில்லாத நடிகை என தமிழ், மலையாள படங்களில் ஒதுக்கியதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும், அவர் கூறியுள்ளதாவது: நாம் மோகன்லாலுடன் நடித்துக்கொண்டிருக்கும்போது 8 படங்களில் எனக்கு வாய்ப்பு வந்தது. ஆனால் மோகன் லால் படம் பாதியிலேயே நின்றுவிட்டது. அதனால் என்னை ஒப்பந்தம் செய்தவர்கள் எனக்கு  ராசியில்லை எனக்கூறி ஒதுக்கினர். நான் மனம் முடைந்து போனேன், யாரும் உதவவில்லை. பின்னர் பாலிவுட்டில்  பிரீனிதா என்ற படத்தில் நடித்தபோது என் சினிமா வாழ்க்கை ஆரம்பமானது எனக் கூறினார்.