1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 20 ஜூன் 2020 (10:08 IST)

பார்வை பறிபோகும் ஆபத்து: கங்கண சூரிய கிரகணத்தை பார்க்கலாமா?

அரிய வானியல் நிகழ்வான கங்கண சூரிய கிரகணம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நிகழவுள்ளது.
 
வழக்கமான சூரிய கிரணத்தை போல இது இல்லை என்றும் இது ஆபத்தானது என கூறப்படுகிறது. இந்தியாவில் காலை 9:15 மணிக்கு தொடங்கி மாலை 3:04 மணிக்கு கிரகணம் முடிகிறது. முழு சூரிய கிரகணம் மதியம் 12:10 மணிக்கு தெரியும். 
 
ராஜஸ்தான், ஹரியானா, உத்தரகண்ட் மாநிலங்களில் முழுமையாக கிரகணத்தை பார்க்க முடியும். நமது சென்னையில் காலை 10:21 தொடங்கும் சூரிய கிரகணம் பிற்பகல் 1:41 வரை நீடிக்கும். அதிகப்பட்ச கிரகணம் நண்பகல் 12 மணிக்கு நிகழும். 
 
வெறும் கண்களாலோ, தொலைநோக்கியாலோ இந்த சூரிய கிரகணத்தை கட்டாயம் பார்க்கக்கூடாது என கூறுப்படுகிறது. ஆம், கண்களின் விழித்திரையில் உள்ள செல்கள் பாதிக்கப்படும் என்பதால் சூரிய கிரகணத்தை பார்ப்பதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.