வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 20 ஜூன் 2020 (07:57 IST)

பாக். ராணுவம் அத்துமீறி தாக்குதல்: என்ன செய்தது இந்திய படை?

தாங்தார் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் என தகவல். 
 
லடாக் எல்லையில் இந்திய சீன படைகள் இடையே நடந்த மோதலில் 20 இந்திய வீரர்களும் 34 சீன வீரர்களும் உயிரிழந்ததாக வெளியான தகவல் இரு நாடுகளை மட்டுமின்றி உலக நாடுகளையே பதட்டத்தில் ஆழ்த்தியது.  
 
இரு நாடுகளும் அமைதி பேச்சுவார்த்தை மூலம் இந்த பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்று உலக நாடுகள் வலியுறுத்தின. அதற்கு ஏற்ப பிரச்சனையும் பல கட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு முடிவுக்கு வந்தது. 
 
ஆனால், நேற்று நள்ளிரவில் சீன வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை ஒன்றை டெல்லியில் உள்ள சீன தூதரகம் வெளியிட்டது. அதில் கால்வாய் பள்ளத்தாக்கு முழுவதுமே சீனாவின் பகுதி என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது மீண்டும் சர்ச்சையை கிளபியுள்ளது.  
 
இந்த பிரச்சனைக்கே இன்னும் தீர்வு கிடைக்காத நிலையில் பாகிஸ்தான் ஜம்மு - காஷ்மீர் நவ்காம் பகுதியில் இந்திய நிலைகள் மீது அத்துமீறி தாக்குதல் நடத்தியது பாகிஸ்தான்.   
 
இதனைத்தொடர்ந்து தற்போது, தாங்தார் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது. இதற்கு இந்தியாவும் தக்க பதிலடி கொடுத்துள்ளது என் அதகவல் வெளியாகியுள்ளது.