திங்கள், 30 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 2 ஜூலை 2021 (11:52 IST)

நாயை கட்டி வைத்து கட்டையால் அடித்து கொன்ற கொடூரர்கள்! – கொந்தளிக்கும் இணையவாசிகள்!

கேரளாவில் நாய் ஒன்றை இளைஞர்கள் சிலர் கட்டி வைத்து அடித்து கொல்லும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரள தலைநகர் திருவனந்தபுரம் அருகே சிலர் கருப்பு நிற நாய் ஒன்றை படகில் கால்களை கட்டிப்போட்டு அடித்து துன்புறுத்தும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பார்ப்போர் மனதை பதபதைக்க செய்துள்ளது. மூர்க்கமாக தாக்கப்பட்டதில் அந்த நாய் அதிக காயம்பட்டு உயிரிழந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ள நிலையில் இறந்த நாய் ப்ரூனோவிற்கு நீதி கிடைக்க வேண்டும் என்று வலியுறுத்தி இணையத்தில் பலர் #JusticeForBruno என்ற ஹேஷ்டேகை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.