மலையாளப் படங்களை வெளியிட தனி ஓடிடி… கேரள அரசு ஆலோசனை!
தென்னிந்தியாவில் சினிமா துறை அரோக்யமாக இயங்கும் மாநிலங்களில் ஒன்று கேரளா.
கொரோனா தொற்று காரணமக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக திரையரங்குகள் இயங்குவதில் சிக்கல் எழுந்துள்ளது. இதனால் பல படங்கள் ஓடிடி தளங்களுக்கு சென்றுவிட்டன. ஆனால் அங்கேயும் பெரிய நடிகர்கள் மற்றும் இயக்குனர்களின் படங்களுக்கே முன்னுரிமை வழங்கப்படுகிறது.
இந்நிலையில் மலையாள படங்களை வெளியிட கேரள அரசே தனி ஓடிடி தொடங்கவேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது. அதை இப்போது கேரள அரசு பரிசீலிக்க ஆரம்பித்துள்ளதாம்.